Recent Posts

Search This Blog

I போராட்டங்களும் மோதல்களும் ஏனைய பிரதேசங்களுக்கும் வியாபிக்கலாம்... மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாவிடின் விலகி வீட்டுக்குச் செல்லவும்.

Wednesday, 20 April 2022
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிடின் போராட்டங்களும் மோதல்களும் ஏனைய பிரதேசங்களுக்கும் வியாபிக்கலாம்.

இது பாரியதொரு நெருக்கடிக்கு வழிவகுக்கும். எனவே காலதாமதமின்றி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்வு திட்டத்தை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது விலகி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


பிரச்சினைகளை தொடர்ந்தும் இழுத்துக் கொண்டு அரசாங்கத்தால் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது.

அதனால் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நாங்கள் அனைவரும் ஒன்றாக கலந்துரையாட வேண்டும். அவ்வாறு முடியா விட்டால் விலகிச் செல்ல வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்ற ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு

குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிரிழந்த சமிந்த லக்‌ஷான், எமது கட்சியின் சந்திப் சமரசிங்கவின் ஆதரவாளரே. இந்த போராட்டம் நாங்கள் ஏற்பாடு செய்தது அல்ல. அவர் எங்களின் இளைஞர் அணியின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இது அரசியல் விடயமல்ல. அவர் பெளசருக்கு தீ வைக்கும் நபர் அல்ல. இங்கு மக்களே ஒன்றிணைந்துள்ளனர். கட்சிகள்

ஒன்றிணைந்து செய்ததல்ல. ஐக்கிய தேசிய கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட முடியாது என்கிறார்கள். அப்படியாயின் எவ்வாறு இதனை சதித்திட்டம் என தெரிவிக்க முடியும் என கேட்கின்றேன்.

அத்துடன் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இன்னும் நீங்கவில்லை, நாட்டுக்கு தேவையான எரிபொருள் இல்லை. எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வுகாண ஒரு நாளைக்கு மூன்று, நான்கு கப்பல்கள் வர வேண்டும். எரிபொருள் இன்றி வாழ்வது கடினமான விடயமாகும். சிறிமா அம்மையாரின் ஆட்சி காலத்தில் காணப்பட்ட நெருக்கடிகளின் போதும் கூட எரிபொருள் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டன. இந்தளவுக்கு பிரச்சினை இருந்ததில்லை.

எனவே பிரச்சினைகளுடன் முன்னோக்கி செய்ய இயலாது. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்க முடியாவிடின் விலகி வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

இதைத்தவிர மாற்று வழிகள் எமக்கில்லை. கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆராய வேண்டும்.

போராட்டங்களுக்கும் மோதல்களும் ஏனைய பிரதேசங்களுக்கும் வியாபிக்கலாம். இதனை தடுக்க விடின் இன்னும் 2,3 நாட்களில் பிரச்சினைகள் பாரியளவில் நெருக்கடிக்கு வழிவகுக்கும். எனவே காலதாமதமின்றி தீர்வு திட்டத்தை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.


No comments:

Post a Comment