Recent Posts

Search This Blog

மனைவியுடன் ஏற்பட்ட தகறாரில், மனைவியின் சகோதரி வீட்டை அடித்து நொறுக்கி தீயிட்டு எரித்த நபர் பொலிஸாரால் கைது.

Sunday, 31 December 2023


நெடுங்கேணி 17 ஆம் கட்டை பகுதியில் வீட்டினை தீயிட்டு கொளுத்திய நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


குறித்த நபர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டமையால் அந்த பெண் பிரிந்து தனியாக தன் சகோதரி உடன் வசித்து வருகின்றார்.


இந்த நிலையில், குறித்த நபர் நேற்று மாலை தனது மனைவி வசிக்கும் சகோதரியின் வீட்டுக்கு சென்று வீட்டினை தீயிட்டு எரித்துள்ளதுடன் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளார்.


இதனையடுத்து ஒட்டுசுட்டான் பொலிஸாரால் அந்த நபர்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.



No comments:

Post a Comment