Recent Posts

Search This Blog

ஆசிரியர் முஹம்மது அஸாம் உயிரிழந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நுஜைக் அஹமட் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

Sunday, 27 August 2023


எஸ்.எம்.எம்.முர்ஷித்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த புஹாரி நுஜைக் அஹமட் (வயது – 25) சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை மரணடைந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழம மட்டக்களப்பு கொழும்பு வீதியில் ஓட்டமாவடி – புனானை எனும் இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியரான ஸர்பராஸ் ஹூஸைன் முஹம்மது அஸாம் (வயது – 25) மரணமடைந்ததுடன் புஹாரி நுஸைக் அஹமட் என்பவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிமை மரணமடைந்துள்ளார்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித் - )



No comments:

Post a Comment