Recent Posts

Search This Blog

எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தம் செய்யப்படும் ; அமைச்சர்

Wednesday, 3 May 2023


 எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தம் செய்யப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


டுவிட்டரில் பதிவிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் 2022 டிசெம்பரில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைய உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


அந்த முடிவுகளின்படி, செலவு அடிப்படையிலான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதை மறுபரிசீலனை செய்யவும், திருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.



No comments:

Post a Comment