Recent Posts

Search This Blog

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவுகின்ற வறட்சியான வானிலை அடுத்துவரும் சில தினங்களில் மாற்றமடைய வாய்ப்பு.

Thursday, 19 January 2023


 கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவுகின்ற வறட்சியான வானிலை அடுத்துவரும் சில தினங்களில் மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும்.


வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு  பலத்த காற்று வீசக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் 

****************************


காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 ‐ 35 km வேகத்தில் வடகிழக்குத்  திசையில் இருந்து காற்று வீசும். 


திருகோணமலை  தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார்  புத்தளம் ஊடாக கொழும்பு வரையான அத்துடன் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில், ஹம்பாந்தோட்டை, மாத்தறை ஊடாக காலி  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 ‐ 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும். 


நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.


கலாநிதி மொஹமட் சாலிஹீன்,

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 



No comments:

Post a Comment