Recent Posts

Search This Blog

இரண்டு முஸ்லிம் முன்னாள் நீதி அமைச்சர்கள் , சில என்ஜியோக்கள் தவிர அனைத்து முஸ்லிம் சமூகமும் ஒன்றிணைந்த வரலாற்று நிகழ்வு.

Tuesday, 29 August 2023

    “விவாக,விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பாக 27 முஸ்லிம் சிவில் அமைப்புகள் கையொப்பமிட்ட கூட்டரிக்கை 2023.08.29 ஆம் திகதி குறித்த அறிக்கை நீதி அமைச்சில் கௌரவ நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது”. சுமார் 27 முஸ்லிம் சிவில் அமைப்புக்கள், பெண்கள், சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பல துறைசார்ந்தவர்கள் இணைந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டலில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களின் மும்மொழிவுகளை உறுதிப்படுத்தும் வகையிலேயே குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 
                                                                          இதுபற்றி முன்னாள் ஆளுனர் அசாத் சாலி அவர்கள் நீதி அமைச்சருடனான சந்திப்பிற் கருத்துரைத்த போது,


குறித்த அறிக்கையிற் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களையே நாட்டின் முழு முஸ்லிம் சமூகமும் ஏற்றுள்ளது எனவும் மேலும் கூறுகையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் இந்நாட்டு முஸ்லிம் மக்களினது உரிமையாகும், அது இம்மக்களின் விருப்பங்களுக்கு உட்பட்டவாறே திருத்தப்பட வேண்டும், அதனை மார்க்க விதிகளுக்கு முரண்படாத வகையில் மக்களின் அபிலாஷையினைப் பிரதிபலிக்கும் விதமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை திருத்தத்திற்கான பரிந்துரையை அமைத்துத் தந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.


 முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினை முஸ்லிம் அல்லாதவர்கள் பலரும் திருத்தி அமைக்க நினைப்பது ஆச்சரியமாக உள்ளது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறினார்.


மேலும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாலும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினாலும், முஸ்லிம் சிவில் அமைப்புகளாலும் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு அமைவாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தைத் தாங்கள் நீதி அமைச்சராக இருக்கும் காலத்திலேயே நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.


மேலும் சட்டத்தரணி நுஸ்ரா சறூக் அவர்கள் கூறும் போது, முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது முஸ்லிம் சமூகத்தினை ஆளுகின்ற சட்டமாகும். அதன் திருத்தங்களை முஸ்லிம்கள் கையாள வேண்டும் எனவும், அது பற்றிய திருத்தத்தில் எமது இந்தக் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துடையவர்கள் எமது சமூகத்தில் மிகச் சிலர் மட்டுமே எனவும், மேலும் பெண் காதி நீதிபதிகள் நியமனத்திற்கு வெளிநாடுகளைச் சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்,

ஆனால் அதனை எமக்கு ஆதாரமாக எடுக்க முடியாது. நாம் ஷரீஆவை பின்பற்றி மட்டுமே இச்சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பெண் காதி நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கருத்துரைத்த டாக்டர் மரீனா தாஹா ரிபாய் அவர்கள், 1400 ஆண்டுகளாக இஸ்லாமிய வரலாற்றில் எந்தவொரு பெண் நீதிபதிகளும் நியமிக்கப்படவில்லை எனவும் அது ஆழ்ந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவேண்டிய விடயமாகும் எனவும், அத்துடன் காதிநீதிபதிகளின் மாதாந்த ஊதியம் ஒரு சிறிய தொகையாகும், அதுவும் காதி நீதிமன்றங்களில் முறைகேடுகள் நடப்பதற்கு காரணமாகின்றது என்றும் எனவே அது பற்றியும் நீதி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

A historical event where all the Muslim community came together except for two former Muslim justice ministers and some NGOs.


The report on 29.08.2023 about the coalition signed by 27 Muslim civil organizations regarding the amendment of the Marriage and Divorce Act was handed over to the Honorable Minister of Justice Wijedasa Rajapaksa at the Ministry of Justice.
About 27 Muslim civil organizations, women, lawyers, social activists, and many other professionals have prepared this report in a way that confirms the statements of 18 members of Parliament under the guidance of the ACJU.
When former Governor Asad Sali commented on this in a meeting with the Minister of Justice, He said that the entire Muslim community of the country has accepted the amendments mentioned in the report and further said that the Muslim Marriage and Divorce Act is the right of the Muslim people of this country, and it should be amended according to the wishes of the people, and the All Sri Lankan Jamiyatul Ulama Sabha has made a recommendation for the amendment to reflect the aspirations of the people so that it does not conflict with the religious rules. He said that it is surprising that many non-Muslims want to amend the Muslim Marriage and Divorce Act, which is unacceptable. He also requested that the Minister , Muslim Marriage Divorce Act be passed during his tenure as the Justice Minister in accordance with the proposals made by the Muslim Members of Parliament, the All Sri Ceylon Jamiatul Ulama and Muslim Civil Organizations.
And lawyer Nusra Sarook says that the Muslim Marriage and Divorce Act is the law that governs the Muslim community. Muslims should deal with its revisions, and there are only a few people in our society who have alternative views to our revisions, and some people point to foreign countries as evidence for the appointment of female Qadi judges, but we cannot take that as evidence. He said that we should only follow Sharia and amend this law.

Commenting on the appointment of female Qadi judges, Al-Alima/Dr. Marina Taha said that no female judges have been appointed in the history of Islam for 1400 years and it is a matter that should be subjected to deep research, and the monthly salary of Qadi judges is a small amount, which is also the cause of malpractices in Qadi courts, so the Ministry of Justice should pay attention to it. He also said that he should.


No comments:

Post a Comment