Recent Posts

Search This Blog

வீட்டினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா... ஒருவர் கைது.

Sunday, 1 January 2023


 யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளைக்கு கொண்டு வரப்பட்டு தம்புள்ளை விகாரை சந்தியில் உள்ள வீடொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.


தம்புள்ளை பிரதேசத்தில் சில காலமாக பாரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளைக்கு கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக பொலிஸ் விசேட பணியக குழுவிற்கு தகவல் கிடைத்ததையடுத்து, தம்புள்ளை தலைமையக பொலிஸ் பரிசோதகர் எஸ்.கே.அல்லெபொல தலைமையில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment