Recent Posts

Search This Blog

பாதுகாப்பு பிரிவிற்கு சொந்தமான பஸ் வண்டிக்கு தீவைப்பு — மிரிஹான பகுதியில் தொடரும் அமைதியின்மை ..

Thursday, 31 March 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது நிலையில் அங்கு மேலும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.


குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவருக்கும் மற்றுமொருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிசார் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சூழ்நிலை தொடர்ந்தும் பதற்ற நிலையில் உள்ளதோடு அங்குள்ள பேரூந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மிரிஹான பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. 


நான்கு பேர் களுபோவில மற்றும் தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெய்லிமிரர் மற்றும் லங்காதீப ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களும் காயமடைந்துள்ளனர்.



No comments:

Post a Comment