Recent Posts

Search This Blog

வாட்ஸ்அப் மூலம் சிறுவர்களுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றத்தில் ஒருவர் கைது.

Thursday, 11 August 2022


காலி பிரதேசத்தில் பல பாடசாலை மாணவர்களை
பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களின் முறைப்பாட்டின்படி, குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

உனவடுன பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வாட்ஸ்அப் மூலம் சிறுவர்களுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர், பிரபல ஆலயம் ஒன்றை நடத்தி வரும் மதகுரு என்ற போர்வையில் சிறுவர்களை ஈர்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி நீதவான் நீதிமன்றில முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment